Saturday, 6 June 2015

பிச்சாவரம் சோழர்களின் கல்வெட்டு


கல்வெட்டு வாசகம் :-


"னார் செய்த
நெறியுடை
ச் சோழகோ
ன் திருத்தோ
ப்பு"


இந்த கல்வெட்டு பிச்சாவரம் சோழர்களின் தலைநகரான "தேவிக்கோட்டையில்" (தீவுக்கோட்டை) கிடைத்தது.  கல்வெட்டின் காலம் கி.பி.16 ஆம் நூற்றாண்டாகும்.


இக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் "சோழகோன்" என்பவரைத்தான் தஞ்சையை ஆண்ட "ரகுநாத நாயக்கர்" அவர்கள் போரில் தோற்கடித்தார்கள்.  ரகுநாத நாயக்கர்  "தீவுக்கோட்டை சோழகனை" தோற்கடிக்கவே "கர்நாடக பேரரசால்" தமிழகத்திற்கு அனுப்பப்பட்டவர். 


அத்தகைய வலிமை வாய்ந்த "மாவீரனாக தீவுக்கோட்டை சோழகன்" இருந்திருக்கிறார்.  சோழ பேரரசு கி.பி.1279 இல் விழ்ச்சியுற்றபொழுது,  சோழ வேந்தர்களின் சந்ததியர்கள் பாதுகாப்புக்கருதி கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து தங்களின் "தேவிக்கோட்டைக்கு" இடம் பெயர்த்திருக்கிறார்கள். 


கி.பி.14 ஆம் நூற்றாண்டில் "வீர வர்ம சோழன்" என்னும் சோழ மன்னர் "பிச்சாவரத்தில்" இருந்து அட்சிபுரிந்ததாக தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான "கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்" அவர்கள் தான் இயற்றிய சமஸ்கிரத நூலான "பார்த்தவன மகாத்மியம்" மற்றும் "ராஜேந்திரபுர மகாத்மியத்திலும்" மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். 


இந்த கல்வெட்டு புகைப்படத்தை எங்களுக்கு கொடுத்துதவிய கும்பகோணம் திரு. ஜெயபாலன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.


இப்படிக்கு :  திரு. அண்ணல் கண்டர்  &  நா. முரளி நாயக்கர்.


----- xx ----- xx ----- xx -----