மாபெரும் வீரம் பொருந்திய வன்னியர்களாகிய நாங்கள் மண்ணை காப்பதற்காக சில இடங்களில் போராடித் தோற்றோம் என்பது வரலாறு. தஞ்சையில் வாழ்ந்த கள்ளர்கள் எப்படி போராடாமல் "தஞ்சை நாயக்கர்களையும்", "தஞ்சை மராட்டியர்களையும்" உள்ளே விட்டார்கள் என்பது புரியவில்லை. தஞ்சை ரகுநாத நாயக்கனை எங்களது "பிச்சாவரம் சோழ அரசர்" கடுமையாக எதிர்த்து போர் புரிந்தார்கள். தஞ்சை ரகுநாத நாயக்கர் "சோழகனை" போரில் வெற்றிக் கொள்ளவே கர்நாடகத்தில் இருந்து "தஞ்சைக்கு" வந்தான். எனவே "பிச்சாவரம் சோழகன்" தான் தஞ்சையை பாண்டியர்க்கு பிறகு ஆண்டான் என்பது எங்களது சோழ வீர வரலாறு.
எங்களது சம்புவராயர்களது வீர வரலாற்றை பாருங்கள். அப்போது தான் தெரியும் நாங்கள் யார் என்று. தன் படைகள் எல்லாம் தோற்றுவிட்டது தாம் நிச்சயமாக இறக்கப்போகிறோம் என்று தெரிந்தும், உயிர்பிழைக்க தப்பித்து வெளியே ஓடாமல், தனி ஒருவனாக மாபெரும் சேனையை எதிர்க்க எங்களது வீர வன்னிய குல க்ஷத்ரிய அரசனான சம்புவராயன் உருவிய வீர வாளுடன் அரண்மனையிலிருந்து வெளிவந்த காட்சியை, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் வடமொழி இலக்கியமான, கங்கா தேவியின் "மதுரா விஜயம்" மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அத்தகைய வீரச் செயல் தான் "க்ஷத்ரிய தர்மமாகும்".
மதுரா விஜயம், நான்காம் காண்டம், சுலோகம்-77 :-
"புற்றிலிருந்து தன் நாக்குகளை நீட்டிக் கொண்டு சினத்தோடு வெளிவரும் நல்ல பாம்பைப் போன்று சம்புவராயன் உருவிய வாளுடன் அரண்மனையிலிருந்து வெளியே வந்தான்".
சுலோகம்-78 :-
"சேனைத்தலைவர்களும் மற்றும் வீரம்மிக்க படை வீரர்கள் ஒவ்வொருவரும் நான், நீ என்று போட்டி போட்டிக் கொண்டு சம்புவராயருடன் போர் செய்வதற்கு முன்வந்தபோதிலும் வீர கம்பண்ணர் சம்புவராயருடன் தானே போரிட விரும்புவதாகக் கூறி அவனை எதிர்கொள்ளப் புறப்பட்டார்".
சுலோகம்-79 :-
"வாள் வீசுவதால் வளைந்த மேனியோடும், குத்திட்டு நின்ற கண்களோடும் இருவரும் வீரப் போர் புரிந்தனர்".
சுலோகம்-80 :-
"இரு மாபெரும் வீரர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போரிடும் இந்தக் காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த தெய்வங்கள், தமக்கு இமை கொட்டாத தன்மையை அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தனர்.
சுலோகம்-81 :-
"வீரகம்பண்ணர் தன் வாளைச் சுழற்றியபோது சம்புவராயர் கர்ப்பிணி ஒருத்தி அழகானதொரு கன்னிகைக்கு அமையப் போகும் கணவனாகிய சிசுவை ஈன்றெடுப்பவள் போல காணப்பட்டார்". (சம்புவராயர் வீரகம்பண்ணரின் வாளால் மரணமெய்தி வீரசொர்க்கம் அடைந்து அங்கே தேவகன்னி ஒருத்திக்கு மணாளனாக ஆகும் தகுதியைப் பெறப் போகிறார் என்பதை இவ்வாறு கவி குறிப்பிடுகிறார்).
சுலோகம்-82 :-
"இந்திரனின் ஆளுகைக்குட்பட்ட வீரசொர்க் கத்திற்கு சம்புவராயரைத் தன் வாள் கொண்டு வீழ்த்தி வீரகம்பண்ணர் அனுப்பி வைத்தார்".
இது தான் எங்களது உண்மையான வீர வரலாறாகும்.
----- xx ----- xx ----- xx -----