இந்திர குலத்தை சார்ந்த "புதுக்கோட்டை தொண்டைமான்கள்" கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். புதுக்கோட்டை தொண்டைமான்கள், சூரியனார் கோயில் ஆதினப் பட்டையத்தில் தங்களை "இந்திர குல வங்கிஷன்" (இந்திர குல வம்சத்தவர்) என்று குறிப்பிடுகிறார்கள்.
சூரிய குலத்தை சார்ந்த "அறந்தாங்கி தொண்டைமான்கள்" வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அறந்தாங்கி தொண்டைமான்கள் "அழுஞ்சியேந்தல் செப்பேடு" மற்றும் "கிழ்ப்பாப்பனூர்ச் செப்பேட்டில்" தங்களை "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர்கள் "ஏனாதிச் செப்பேட்டில்" தங்களை "சூரிய வங்கிச திலகன்" என்று குறிப்பிடுகிறார்கள்.
அறந்தாங்கி தொண்டைமான்கள் "பிறாந்தனில் ஏந்தல்கள் குறிச்சிகள் செப்பேட்டில்" தங்களை "முகிலின் கிழ்திரியும் இள வன்னிய மகா கண்டன்" என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது "மேகத்தில் திரியும் இளம் சூரியனை போன்ற மகா கண்டன்" என்பதாகும். எனவே "இள வன்னிய" என்பது "இளம் சூரியன்" என்று பொருள்படும். அறந்தாங்கி தொண்டைமான்கள் "வன்னியராகிய சூரிய குலத்தவர்கள்" ஆவார்கள்.
இதைப்போலவே புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டிலும் தங்களை பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதில் "முகிலின் கிழ்திரியும்" என்ற பகுதி சிதைந்து காணப்படுகிறது. ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் மற்றும் மணியம்பலம் கல்வெட்டுகளில், அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை "இள வன்னியர் மீசுர கண்டன்" என்று குறிப்பிடுகிறார்கள் (I.P.S. No.738 & 845). இக் கல்வெட்டுகளின் மூலம் இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தவர்கள் என்று அறியமுடிகிறது.
அறந்தாங்கி தொண்டைமான்களின் முன்னோர் என்று அவர்களால் குறிக்கப்பெற்ற தொண்டைமான் இளந்திரையான் நாககன்னிகைபால் பிறந்த சோழன் மகன் என்ற காரணத்தால் தங்களைச் சோழர் குலமாகவே குறிப்பிட்டுக்கொண்டனர். அவர்கள் மெய்க்கீர்த்தியில் அதைக் குறிக்கும் பல தொடர்கள் உள்ளன. அவை :-
"சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்"
"நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்"
"புலிக்கொடி மேருவில் பொறித்தருள் புகழோன்"
"புறாவினுக்காகத் துலைபுகு பிரபலன்"
"கிடாரத்து அரசன் தெய்விதம் அளித்தோன்"
"கலிங்கம் திறக்கொண்டு பரணி புனைந்தோன்"
"கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்"
"ஓட்டக் கூத்தன் உயர்தமிழ் புனைந்தோன்"
இத் தொடர்கள் சோழர் குல தொடர்பை குறிப்பிடுவதாகும். இவற்றில் சோழர்களின் சூரிய குலம், இமயத்தில் சோழர்கள் பொறித்த புலிக்கொடி, புறாவுக்காக தன் சதையை கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி, கிடாரத்தை வென்ற முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் கருணாகர தொண்டைமான் பற்றிய கலிங்கத்துப்பரணி, வன்னியர்களின் புகழினைப் பற்றி சிலைஎழுபது கவி பாடிய கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு கருணாகர தொண்டைமான் செம்பொன் பரிசளித்தது, ஓட்டக்கூத்தர் சோழர்கள் பற்றி பாடிய மூவருலா போன்றவைகள் குறிப்பிடப்படுகின்றன.
பல்லவர்களான அறந்தாங்கி தொண்டைமான்கள், தங்களை "பண்ணைவயல் செப்பேட்டில்" கிழ் கண்ட வாசகங்களில் குறித்துள்ளனர் :-
"பாலாறு உடைய பாக்கிய சம்பன்னன்" (சம்பு மன்னன்).
"மலை கலங்கினும் மனங்கலங் காதான்" (இவ் வாக்கியம் வன்னியர் பற்றியது, பல வன்னியர் செப்புபட்டயங்களில் இது வந்துள்ளது).
"கச்சியம் பதியான் கருணா கடாட்சன்" (காஞ்சிபுரத்தவன்).
"மல்லை மயிலை வண்டை நகராதிபன்" (மாமல்லபுரம், மயிலாப்பூர், வண்டலூர் நகரத்தின் அதிபன்).
"கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்" (கம்பர் எழுதிய, வன்னியர் புகழ்பாடும் "சிலை எழுபதிற்கு" செம்பொன் அளித்தவன்).
"நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்" (சோழரும், பல்லவரும் "க்ஷத்திரியர் என்பதாலும், இவர்களிடையே இருந்த மிக நெருங்கிய திருமணஉறவும் இதை உறுதிப்படுத்துகிறது).
"கலிங்கத் திறைகொண்டு பரணி புனைந்தோன்" (அறந்தாங்கி தொண்டைமான்களை, கலிங்கத்தை வென்று பரணி படைத்த "கருணாகர தொண்டைமான்" வம்சத்தவர்கள் என்று குறிப்பிடுகிறது).
எனவே மேற்சொன்ன காரணங்களால் "அறந்தாங்கி தொண்டைமான்கள்" பல்லவர்கள் என்பதும் அவர்கள் "வன்னிய குல க்ஷத்திரிய" சமூகத்தை சார்ந்த மரபினர்கள் என்பதும் பெறப்படுகிறது. சோழர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாகவும் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களாகவும் விளங்கிய "காடவர்கள்" (பல்லவர்கள்) வன்னியர் சமூகத்தவர்கள். இக் காரணமும் அறந்தாங்கி தொண்டைமான்களின் சமூக வரலாற்றுக்கு வலிமை சேர்கிறது.
எனவே சோழர்களும், பல்லவர்களும் "வன்னிய குல க்ஷத்ரிய இனத்தை" சேர்ந்தவர்கள் என்பது வரலாற்றில் உறுதியாகிறது.
----- xx ----- xx ----- xx -----