தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-
"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"
"கள்ள" என்ற முன்னொட்டு கல்வெட்டில் இருக்கின்ற காரணத்தினால், இப் பெயரை சில கள்ளர் சமூகத்தவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இது முற்றிலும் தவறானதாகும் என்பதை கிழ் காணும் அதே "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு (தொடர் எண் : 05/2004) ஒன்று நமக்கு தெளிவாக தெரிவிக்கிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி.1194 ஆகும் (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம்) ;-
"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"
இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. மேலும் "கொங்கரையர்" என்பது அவர்களது "பட்டப் பெயர்" ஆகும்.
எனவே கி.பி. 8-9 ஆம் நுற்றாண்டுகளில் குறிப்பிடப்படும் "கொங்கரையர் கள்ளப் பெருமானார்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பதை கி.பி.1194 ஆம் ஆண்டு சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவரின் "கொங்கரையர்" பட்டப் பெயர் மூலம் தெரியவருகிறது. "கள்ளப் பெருமானார்" என்பது பெயராகும். அது "கிருஷ்ண பகவானைக்" குறிப்பிடும் பெயராகும்.
புதுக்கோட்டை மாவட்ட சோழர் கால கல்வெட்டு ஒன்று "கள்ள கண்ணன்" (I.P.S. No.142) என்று தெரிவிக்கிறது. இது ஒருவருடைய பெயராகும் என்பது மிக மிக தெளிவாகும். அதாவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயராகும்.
தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் என்ற நூலை எழுதிய அறிஞர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் "தெற்கில் பிரமன் பூசித்த வெள்ளைக்கம்பரும் வடக்கில் திருமால் வழிபட்ட கள்ளக்கம்பரும் அருள் பாலிக்கின்றன" (பக்கம்-251) என்று குறிப்பிடுகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் காயர் கிராமத்தில் "ஸ்ரீ கள்ளிச்சி அம்மன்" ஆலயமும் இருக்கிறது.
கங்கர்களின் கிளைமரபினர்களான பங்கள நாட்டு கங்கரைய மன்னர் ஒருவர் தன்னை "அழிவின் கள்ளரசியார்" என்று கல்வெட்டில் குறித்துள்ளார் :-
"பங்களநாடுடையார் மஹாதெவர் மகன் அழிவின் கள்ளரசியாராகிய பிருதிகங்க அரையர்" (A.R.E.No.139 of 1928).
முதுகுடி வேளிர்களான கங்கர்கள் அக்னியில் தோன்றிய க்ஷத்ரிய மரபினர்கள் ஆவர். இவர்கள் தங்களை "வன்னிய மாதேவன்" என்றும் "அத்தி மல்லன்" என்றும் "பிரம்ம க்ஷத்ரியன்" என்றும் கல்வெட்டில் குறிப்பிட்டனர்.
கங்கர்களின் கிளைமரபினர்களான நீலகங்கர்கள் தங்களை "பள்ளி" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "வன்னிய சாமந்தன்" என்றும் "சம்பு குலத்தவன்" என்றும் குறித்தனர். நீலகங்கர்களின் பண்ணையான மணிமங்கலத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று "கங்க ராஜா மண்டபம்" என்று குறிப்பிடுகிறது. நீலகங்கர்கள் தங்களை "சோழ கங்க தேவன்" என்றும் "வாணன்" என்றும் "நீலகங்க வாணன்" என்றும் "பஞ்சநதி வாணன்" என்றும் "மலையரையன்" என்றும் குறிப்பிட்டனர்.
மேலும் இவர்கள் தங்களை "நீலகங்கன் அச்சல வீமன் அரசர் தலைவன்" என்றும் குறிப்பிட்டனர். அதாவது "அரசர்களுக்கு தலைவனான நீலகங்கன் அச்சல குலமான மலையமான் குலத்திற்கு பீமன் போன்றவன்" என்று முதலாம் குலோத்துங்கச் சோழனின் ராணிப்பேட்டை திருவல்லம் கல்வெட்டில் குறிப்பிட்டனர். இதே கல்வெட்டில் நீலகங்கர் மகளும், முதலாம் குலோத்துங்கச் சோழ தேவரின் (ராஜபுத்திர சாளுக்கிய மரபினர்) மருமகளுமான "வில்லவன் மாதேவியார்" அவர்களும் குறிப்பிடப்படுகிறார்கள்.
----- xx ----- xx ----- xx -----
By : N. Murali Naicker