Wednesday, 3 June 2015

சோழர்கள் காலத்தில் திருத்துறைப்பூண்டியில் வாழ்ந்த வன்னியர்களை, "வன்னியர்கள்" என்று சொல்லும் கல்வெட்டு




"கேரளகுலாசனி சருப்பேதி மங்கலத்து வன்னியரில் சோழயவரையன் அகம்படியார்க் காவல்கூலிக்கு இட்ட நிலமாயவொனை"  (Line  8  to  11).

(திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள், தொடர் எண் : 205/1976, காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு).


கேரளகுலாசனி (கேரள குலத்திற்கு சனியன் போன்றவன்) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்த "வன்னியர் சமூகத்தை சேர்ந்த சோழஅரையன்" என்பவர் அகம்படியார்களுக்கு காவல்கூலிக்கு கொடுத்த நிலம் பற்றிய ஆணை"


இக் கல்வெட்டில் இடம்பெறும் "வன்னியர் சமூகத்தை சேர்ந்த சோழஅரையன்" என்பவர் பிராமணர்கள் வாழும் சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் அகம்படியார்களுக்கு காவல்கூலிக்கு கொடுத்த நிலம் தவிர சில நிலங்களை இறைவனுக்கு கொடையாக கொடுத்திருக்கிறார்.


----- xx ----- xx ----- xx -----