பட்டினத்தார் என்று அழைக்கபெரும் "பட்டினத்தடிகள்" அருளிச் செய்த ஞானம் 45-வது கவி :-
"வேண்டுந்திரவியமும் மேலுயர்ந்த பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடும் அம்பலமும் - மாண்டுபெருங்
காடுரந்தாரேமனமே கண்டாயோ மாயனயன்
தேடரிய ஈசன் செயல்" என்னும் கவியில் பட்டினத்தடிகள்
"மேலுயர்ந்த பள்ளியெல்லாம் ஆண்ட திரைநாடும்" என்பதால் "பள்ளிகள்" (வன்னியர்கள்) பல நாட்டை ஆண்ட அரசர்கள் எனவும் அவர்கள் அரசாட்சி செய்தது கடலால் சூழப்பட்ட நாடுகள் எனவும் தெரியவருகிறது.
பல நாட்டை ஆண்ட அரசர்கள் என்பதால் தான் வன்னியர்களை சோழர்கள் காலத்தில் "பன்னாட்டவர்கள்" என்று கல்வெட்டிலும் இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டனர்.
பட்டினத்தடிகள் "திரைநாடு" என்று சொல்வது "பல்லவர்கள் ஆண்ட நாடுகளை" குறிப்பதாகும். பல்லவர் கோன் கழற்சிங்க நாயனார் அவர்களை, சுந்தரர் தனது திருத்தொண்டர் தொகையில் கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
"கடல்சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் சிங்கன் அடியார்க்கு அடியேன்"
பல்லவ குல பரிஜாதமான காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன், ஆமூர் கல்வெட்டில் "திரையன் மோகனன் ஆளப்பிறந்தானான திருநீற்று தொண்டைமான்" என்று குறிப்பிடப்படுகிறான். பல்லவர் கோன் கோப்பெருஞ்சிங்கன் "திரையன்" என்று அழைக்கப்பெற்றான். அவன் தனது முன்னோனான "காடவர் கோன் கழற்சிங்கனைப்" போன்று சோழர்கள் காலத்தில் "கடல்சூழ்ந்த திரை நாடுகளை" ஆண்டிருக்கலாம் அல்லது அவனுடைய குல முன்னோரின் பெயரினை பயன்படுத்தியிருக்கலாம்.
எனவே பட்டினத்தடிகள் தமது கவியில் சொன்ன "உயர்குலத்து பள்ளி எல்லாம் ஆண்ட திரை நாடுகள்" என்பது சான்றுகள் மூலம் முற்றிலும் உண்மையாகிறது. பட்டினத்தார் வாக்கின் மூலமாக "வன்னியர்கள் பல நாட்டை ஆண்ட பரம்பரை" என்பது வரலாற்றில் உறுதிப்படுத்தப்படுகிறது.
----- xx ----- xx ----- xx -----
குறிப்பு : "காடவர் கோன் கழற்சிங்க நாயனார்" திருவுருவமும் (இத் திருவுருவம் சோழர்கள் காலத்து தராசுரம் கோயிலில் இருக்கிறது) மற்றும் "காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன்" திருவுருவமும் (இத் திருவுருவம் சோழர்கள் காலத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கிறது) இக் கட்டுரையுடன் புகைப்படங்களாக கொடுக்கப்படுகிறது.