தமிழ் நாட்டில் சில சூத்திர சமூகத்தை சேர்ந்த அறிவாளிகள் "வன்னியர்களுக்கு", வன்னியர் என்ற பெயரே கிடையாது என்றும் "பள்ளிகள்" என்ற பெயரில் மட்டுமே அழைக்கப்பெற்றனர் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள், "வன்னியர்" என்ற பெயரில் பல சமூகத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் போலி வரலாறு எழுதி தங்களுக்கு தானே மகிழ்கிறார்கள்.
நாங்கள் பல முறை அவர்களுக்கு சோழர்கள் காலத்து கல்வெட்டு விளக்கம் கொடுத்தப்பிறகும் அவர்கள் தொடர்ந்து "வன்னியர்" என்ற பெயருக்கு உரிமை கொண்டாடிவருகிறார்கள். சிறிதும் வெட்கம் இல்லாமல் உரிய சான்றுகள் (சோழர் காலச் சான்றுகள்) கொடுக்காமல் இழிவானச் செயலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
அத்தகையோருக்கு சம்மட்டியடி கொடுப்பது போல கிடைக்கப்பெற்றது தான் கங்காதேவியின் "மதுராவிஜயம்" என்ற 14 ஆம் நூற்றாண்டின் வடமொழி நூலாகும்.
வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி தன் கணவன் தென்னாட்டு திக் விஜயத்தில் (போரில்) வெற்றியடைந்ததைப் போற்றும் வகையில் "மதுரா விஜயம்" என்ற வடமொழி காவியத்தை எழுதினார்கள்.
மதுரா விஜயத்தில் மூன்றாம் காண்டத்தில் உள்ள 42-ஆம் ஸ்லோகம் சம்புவராயர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடுகிறது. அது :-
"அதன்பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்தால் துலுக்கர்களின் ஆட்சியை அகற்றிவிடலாம்" என்று சொல்கிறது.
மேற்சொன்ன சான்று என்பது நாங்கள் சொல்லவில்லை, வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி சொன்ன சான்றாகும். கங்கதேவியே எங்களை "வன்னியர்கள்" என்று சொன்னப்பிறகு மற்றவர்கள் அப்படி இல்லை என்று சொல்வதற்கு என்ன சான்று இருக்கிறது.
சம்புவராயர், காடவராயர், மலையமான் உள்ளிட்ட பல மன்னர்கள் சோழர் காலத்தில் தங்களை "பள்ளி" என்றும் "வன்னியர்" என்றும் "சம்பு குலத்தவர்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணராத சில சூத்திர சமூகத்தவர்கள் தங்களையும் "வன்னியர்கள்" என்று அற்பத்தனமாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
அத்தகையோருக்கு எங்களது அழ்ந்த அனுதாபங்கள்.
----- xx ----- xx ----- xx -----