ராஜஸ்தான் அபு மலையில் செய்வித்த யாகத்தீயில் இருந்து தோன்றிய அக்னி குல அரசர்களை பற்றி சொல்கிறது கிழ் காணும் கல்வெட்டு. சங்க தமிழ் இலக்கியமான புறநானூறு (பாடல் 201 & 202), வேள்வியில் தோன்றிய அரசனான "இருங்கோவேளைப்" பற்றி குறிப்பிடுகிறது. சங்கத் தமிழ் புலவரான கபிலர் அவர்கள், வேளிர் குல மன்னனான இருங்கோவேளைப் பார்த்து, நீயோ வடபால் முனிவன் ஓமகுண்டத்தில் தோன்றியாவன். உன்னுடைய முன்னோர்கள் துவாரகையை (சிந்து சமவெளி) ஆண்டவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். புலவர் கபிலர் அவர்கள் குறிப்பிடும் "வடபால் முனிவன்" என்பவர் "சம்பு மாமுனிவன்" என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் தமிழ் இலக்கியங்களை கொண்டு உறுதி செய்துள்ளார்கள்.
வடபால் முனிவன் (சம்பு மாமுனிவன்) வடபகுதியை சார்ந்தவர் என்பது அவர் பெயரில் இருந்தே தெரியவருகிறது. குறிப்பாக க்ஷத்ரியர்கள் "அபு மலையில்" செய்வித்த யாகத்தீயில் இருந்து தோன்றியவர்கள் என்பது வரலாறாகும்.
மனிதர்கள் எப்படி அக்னியில் இருந்து தோன்றமுடியும் என்று சிலர் வினா தொடுக்கிறார்கள். இவைகளை நமது பண்டைய மரபு என்று கருத்தில் கொள்ளவேண்டும். பண்டைய காலத்தில் அரசர்கள் "அக்னியில் தோன்றிய" கருத்து என்பது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகில் பல பகுதிகளில் இருந்து வந்தது. மகாபாரதம் திரௌபதியும், த்ருஷ்டதுய்மனும் "அக்னியில் தோன்றியவர்கள்" என்று சொல்கிறது. நமது தமிழ் கடவுளான "முருகனும்" சிவபெருமானது நெற்றிக் கனல் நெருப்பில் இருந்து தோன்றியவரே. அக்னி குண்டத்தில் தோன்றிய யது குல "சாளுக்கியர்கள்", தங்களது குல கடவுளாக "முருகனையே" வழிப்பட்டார்கள் என்பது வரலாறாகும்.
அரசர்களுடைய தோற்றத்தை "கடவுளுக்கு" நிகராக அக் காலகட்டத்தில் கருதப்பட்டது. அரசர்களின் ஆதி தோற்றத்தை விட அவர்களின் வம்சத்தினர் கடந்த காலத்தில் செய்த சாதனைகள், புகழ் மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் இன்று நம்மை வியப்பூட்டுகின்றன. இந்த பெருமைக்கெல்லாம் உரிமையானவர்கள் யார் என்பதே வரலாற்றில் முக்கியத்துவமான ஒன்றாகும். அதை விடுத்து அரசர்களின் தோற்றத்தின் கதைகளை கிண்டல் செய்வது என்பது அவர்கள் நமக்கு விட்டுசென்ற அனைத்தையும் கிண்டல் செய்வதற்கு சமமாகும். மேலும் இக் கருத்துக்களை சொன்ன தமிழ் புலவர் பெருமக்களான, "கபிலர்", "கம்பர்", "இரட்டைப் புலவர்", தமிழ் தாத்தா உ.வே.சா, போன்றோரை அவமதிக்கும் செயலாகும்.
----- xx ----- xx ----- xx -----
"Mount Abu Vimala Temple Inscription of 1378 A.D", which says, the "Kings" generated from the "Fire-Pit" :-
"The first part begins with the well-known story how on the mountain Arbuda there sprang from the fire-pit (anala-kunda, agni-kunda) of the sage vasishtha the hero Paramara. In his lineage appeared the hero Kanhada Deva ; and in his family there was a chief named Dhandhu (Dhandhu Raja), who was Lord of the town of Chandravati and who, averse from rendering homage to the Chaulukya King Bhima Deva"
(Epigraphia Indica, Vol-IX, No.18, page-151).
----- xx ----- xx ----- xx -----