தமிழ் நாட்டில் பல ஆண்டு காலமாக நிலவிய "சோழர்கள் யார்" என்ற சர்ச்சை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கிழ் காணும் "முதலாம் ராஜேந்திர சோழனின்" எலவானாசூர் கல்வெட்டு (கி.பி.1025) அதற்கு மிகத் தெளிவான ஆதாரத்தை கொடுக்கிறது.
முதலாம் ராஜேந்திர சோழனை "வன்னி குடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர்" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதாவது முதலாம் ராஜேந்திர சோழன் அவர்களை "வன்னிக் குடியில்" உதித்தவர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-
"வந்நிகுடி உடையார் ஸ்ரீராஜேந்திர தேவர்" (Line 2 & 3)
வன்னிகுடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவரின், கிழ்ச் செம்பி நாட்டு அதிகாரிகள் கிழவன் சங்கரநாராயண வானவன் முவேந்த வேளார் ஊருடைய பரமேஸ்வரர் கோயிலில் முதலீடாக முப்பது காசினை தனமாக கொடுத்ததைப் பற்றி சொல்கிறது இக் கல்வெட்டு.
சோழர்கள் "வன்னியர் குடி" என்பது மேற்குறிப்பிட்ட கல்வெட்டின் மூலம் முற்றிலும் உண்மையாகிறது. பிச்சாவரம் சோழ அரசர்களே சோழர்களின் வாரிசுகள் என்பது உறுதியாகிறது.
----- xx ----- xx ----- xx -----