Wednesday, 22 July 2015

காடவ வேந்தர்களான பரூர் கச்சியராயர்கள்


காடவ வேந்தர்களின் வழி மரபினர்களான "பரூர் கச்சியராயர்கள்" (காஞ்சி தலைவர்கள்) வீரமா முனிவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். விருதாச்சலத்தில் இருக்கும் இப் "பரூர்" இன்று "முகாசாப் பரூர்" என்று அழைக்கப்படுகிறது. பல்லவ வேந்தர்களான "கச்சியராயர்கள்" கிருத்துவத்தையும் ஆதரித்தனர் என்பது வரலாறு. இப் புகழ் மிகு மரபின் முன்னோனே "பல்லவ குல பாரிஜாதமான காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்" ஆவான்.


கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னையின் திருத்தல வரலாறு, "பரூர் கச்சியராயர்களின்" வரலாற்றை விளக்கி கூறுகிறது. இன்றும் இக் கோயில் விழாக்களுக்கு, வன்னிய குல க்ஷத்ரிய கச்சியராய மன்னரான "மஹா ராஜ ராஜ ஸ்ரீ வீரசேகர பொன்னம்பல பாலதண்டாயுத கச்சியராயர்" அவர்களே தலைமை தாங்குகிறார்கள் மற்றும் முதல் மரியாதை பெறுகிறார்கள்.  


----- xx ----- xx ----- xx -----