விளந்தை கச்சியராயர்களின் முன்னோர்கள், சோழப் பேரரசின் வலிமைமிகு குறுநில மன்னர்களாக விளங்கிய "காடவராயர்கள்" ஆவார்கள். சோழப் பேரரசும் பாண்டியப் பேரரசும் வீழ்ச்சியடைந்தபிறகு இவர்கள் "பருவூரையும்", "விளந்தையையும்" தலைநகராகக் கொண்டு இரண்டு அரச குடும்பங்களாக ஆட்சிபுரிந்துள்ளனர். "பருவூர்" இன்று "முகாசப் பருவூர்" (விருதாசலம் அருகில்) என்றும் "விளந்தை" விளந்தை என்ற பெயர் மாறாமலும் வழங்கப்படுகிறது. "கச்சியராயர்கள்" (காடவராயர்கள்) சோழர் காலம்தொட்டு ஆங்கிலேயர் காலம் வரை இப்பகுதிக்கு குறுநிலமன்னர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் ஆட்சிப்புரிந்துள்ளனர். இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்" மரபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.
விளந்தையை தலைமை இடமாகக் கொண்டு கிழ்காணும் கச்சியராய மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர் என்று கல்வெட்டுக்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.
1. இராகுத்தமிண்டன் அரசமார்தாண்டன் வெட்டுங்கை அழகிய கச்சியராயர் - I. (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு).
2. இளமைப் பெருமாள் கச்சியராயர். (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு).
3. சேவகப் பெருமாள் கச்சியராயர். (கி.பி. 1372).
4. ஸ்ரீ ரங்கநாதரான வலங்கைமீகாம வாணகோவரையன். (கி.பி. 1394).
5. ஏகாம்பரநாதர் கச்சியராயர்.
6. இராய இராகுத்தமிண்ட மல்லீகார்ச்சுன கச்சியராயர். (கி.பி. 1471).
7. வெட்டுங்கை அழகிய கச்சியராயர் - II. (கி.பி. 1473).
8. பள்ளி கொண்ட பெருமாள் கச்சியராயர் - II. (கி.பி. 1491).
9. திரிநேத்ரநாத கச்சியராயர். (கி.பி. 1504).
இக் கட்டுரையை நான் 2007 - ல் எழுதியப் பிறகு, மற்றொரு விளந்தை கச்சியராய அரசரைப் பற்றிய பெயர் தெரியவந்தது. அவர் பெயர் "சிருப்பராயர்க் கச்சிராயர்" (கி.பி.1451). அவரது முழு பெயர் :-
"ஸ்ரீமத் இராகுத்த மிண்டன் அரசமாத்தாண்டன் சங்கிராமதீரன் இளவரச மணவாளன் சோணாடு காத்தான் கங்கை விடங்கப் பெருமாள் ஸ்ரீபாதபக்தன் விளந்தை சிருப்பராயர்க் கச்சிராயர்"
----- xx ----- xx ----- xx -----