கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடிக்கு அருகில் இருக்கும் கீழுர் பாளையத்தை ராஜபுத்திர வம்சத்து வன்னியர்களான "பாஷா நயினார்கள்" ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்களைப்பற்றி தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள் "வன்னியர் மாட்சி" என்ற நூலில் எழுதியுள்ளார்கள்(1).
டெல்லி முகலாயர்களிடம் தளபதிகளாக (பாஷா) இருந்த இவர்கள் "ராஜபுத்திர வம்சத்தினர்" ஆவார்கள். முகலாயர்களிடம் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இவர்கள் குடிகளுடனும், சேனைகளுடனும் புறப்பட்டு தமிழகத்திற்கு வந்து கீழுர் பகுதியில் "பாஷாரப் பாளையம்" அமைத்து ஆட்சி செய்திருக்கிறார்கள்(2).
1902 பிப்ரவரித் திங்கள் 12 ஆம் தேதிக்குச் சரியான பிலவ வருடம் (பிலவங்க) மாசி மாதம் 1 - ஆம் தேதி எழுதப்பட்டுள்ள ஒரு கடன் பைசல் ஆவணத்தில் மூலம் இப்பாளையக்காரர்கள் வன்னிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது :-
"கீழுர் பாளையக்காரர் துரைசாமி பாஷா நயினார் பாரியை முத்தாயாள் வன்னிய ஜாதியைச் சேர்ந்த அரியலூர் லேட் ஜமீன்தார் குமாரர் விஜய கோவிந்த மழவராய நயினார் அவர்களின் குமாரத்தி"
என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழுர் அரசர்கள் வன்னிய ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது(3). வன்னிய வம்சத்து ராஜபுத்திர க்ஷத்ரியர்களான கீழுர் அரசர்களின் கொடி "காளைச் சின்னம் பொறித்த கொடியாகும்".
அரியலூர் மழவராய அரசர்கள் தங்களை "விதிஹோத்திர கோத்திரத்தினர்" என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்(4). இந்த கோத்திரமானது, காளைச்சின்னத்தை கொண்ட அக்னி குல க்ஷத்ரியர்களான "ஹேஹேய காலச்சூரி அரசர்களின்" கோத்திரமாகும். இவர்கள் "சட்டிஸ்கர் மாநிலத்தை" (மத்திய பிரதேசம்) ஆட்சி செய்தவர்களாவர். தங்களை கல்வெட்டுகளில் "சம்பு குலம்" என்று குறிப்பிட்டனர்(5).
இதைப்போலவே, மத்திய பிரதேச மாநிலம் மால்வாவை தலைநகராகக் கொண்டு மத்திய மேற்கு இந்தியாவை ஆட்சி செய்த ராஜபுத்திரர்களான பர்மார்களும், தங்களை "வன்னிய வம்சத்தவர்கள்" என்று கி.பி.1104 ஆம் ஆண்டு நாக்பூர் சமஸ்கிருத கல்வெட்டில் குறிப்பிட்டனர்(6).
எனவே, ராஜபுத்திர க்ஷத்ரிய அரசர்கள் "வன்னிய வம்சத்தவர்கள்" என்பது உறுதியாகிறது.
Foot Notes :
1. வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா.
2. மேலது, பக்கம் - 121.
3. மேலது, பக்கம் - 125.
4. A.R.E, No.89 of 1927.
5. Epigraphia Indica, Vol-XIX, Page-210.
6. Epigraphia Indica, Vol-II, Sanskrit verse - 4, page - 182 &
Studies in Rajput History, Vol-I, Origin of the Chalukyas, By : Ranjit Singh Satyasray.
----- xx ----- xx ----- xx -----
By : N. Murali Naicker