தொல்லியல் அறிஞர் திரு. நடன காசிநாதன் ஐயா அவர்கள், வன்னியர் வரலாறு என்ற நூலில், 107 ஆம் பக்கத்தில் ஒரு மிக முக்கிய செய்தியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள் :-
"முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பில் பங்கு பெற்ற படைத் தலைவர்களுள் ஒருவன் மேல் வங்காளத்தில் தங்கிவிட்டான் என்றும், அவன் வழியில் வந்த 'சாமந்தசேனன்' என்பானே பிற்காலத்தில் வங்காளத்தில் ஆட்சி புரிந்த சேன மரபினரின் முதல்வன் என்றும் வரலாற்றறிஞர் ஆர். டி. பானர்ஜீ கூறியிருக்கிறார். சாமந்தன் என்ற சொல் வன்னியர்களைக் குறிக்கும் பல சொற்களில் ஒன்று. ஆதலால் சாமந்தசேனன் வன்னியராக இருக்க வாய்ப்புண்டு"
என்று கருத்து தெரிவித்திருந்தார்கள்(1). இந்த கருத்தை சான்றுகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்தபோது "சேனா அரச மரபினர்கள்" யார் என்பதை பற்றி அறியமுடிந்தது. வரலாற்றறிஞர் திரு. ஆர். டி. பானர்ஜீ அவர்களின் புத்தகத்தில், பக்கம்-73 மற்றும் 99 இல் இருந்த ஆங்கில கருத்தை நான் கீழே தமிழில் கொடுத்துள்ளேன் :-
"முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பானது மேற்கு வங்கத்தில் எந்த விதமான அரசியல் பிளவுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அவன் அங்கே ஒரு நிரந்தர ஆட்சியாளர்களை விட்டுச்சென்றான். கர்நாடக சேனா அரசர்களான இவர்கள், வங்கதேசத்தின் பாலா அரசர்களுக்குப் பிறகு வங்கம் மற்றும் மிதிலாவின் அரசர்களாக அரியணை ஏறினார்கள்." (பக்கம் - 73).
"தென்னிந்தியாவின் மாபெரும் சக்கரவர்த்தியான முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை படையெடுப்பின்போது வங்கத்தில் நிரந்தர ஆட்சியாளர்களை விட்டுச்சென்றான். வல்லாள சேனாவின் சித்தாஹாதி சாசனத்தில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால், விஜய சேனாவின் பாட்டனாரான சாமந்த சேனா, ராதா நாட்டில் வசித்து வந்தார் என்பதாகும். அணைத்து சேனா கல்வெட்டுகளும் மிகத் தெளிவாக, சேனா அரசர்களின் பூர்வீகம் கர்நாடக என்றும் அவர்கள் க்ஷத்ரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கின்றன. அதாவது சேனா க்ஷத்ரிய அரசர்கள் தென்னிந்தியாவின் கர்நாடகத்தில் இருந்து வங்கதேசம் சென்றவர்கள் என்பதாகும்.
கல்யாணி சாளுக்கிய அரசன் ஆறாம் விக்கிரமாதித்தியன் (கி.பி.1076-1126) தனது தந்தையான முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சிக்காலத்தில் வங்கத்தின் மேல் படையெடுப்பு நடத்தியிருந்தாலும், அவனால் கிழக்கு இந்தியாவில் எந்த ஒரு நிரந்தர ஆட்சியாளர்களையும் குடியமர்த்தமுடியவில்லை. மேலும் வில்ஹனதேவாவின் குறிப்பை மையமாக வைத்து பார்க்கின்ற பொழுது, திரிபுரி மற்றும் ரத்னபுரா சேதி அரசர்களின் எந்த ஒரு குறிப்பிலும் சாளுக்கிய அரசர்கள் கி.பி.11 ஆம் நூற்றாண்டின் மத்திய காலக் கட்டத்தில் வடஇந்தியாவில் படையெடுப்பை மேற்கொள்ளவில்லை என்று தெரியவருகிறது.
அதே வேளையில் முதலாம் ராஜேந்திர சோழன், சாளுக்கிய அரசன் இரண்டாம் ஜெயசிம்மனை முயங்கி அல்லது முசங்கி என்ற இடத்தினில் தோற்கடித்தான் என்று தெரியவருகிறது. இதை சாளுக்கிய புலவர்கள், சாளுக்கிய அரசன் சோழனை தோற்கடித்தான் என்று சொன்னாலும், மேல்பாடி கல்வெட்டானது எந்த வித சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் தெரிவிப்பது என்னவென்றால், சாளுக்கிய அரசன் தோல்வியடைந்தான் என்றும் முதலாம் ராஜேந்திர சோழன் அவனிடமிருந்து பல செல்வங்களை கைப்பற்றினான் என்பதாகும்.
முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின்போது கர்நாடகத்தில் இருந்து சென்ற ஒரு தளபதியானவர் மேற்கு வங்கத்தில் தங்கிவிட்டார். இவருடைய வழித்தோன்றலே சாமந்த சேனன் என்பவன் ஆவான். சாமந்த சேனனே மேற்கு வங்கத்தில் சேனா சாம்ராஜ்யத்தை (Sena Dynasty) தோற்றுவித்தவர் ஆவார்.
இந்த சாமந்த சேனன் என்பவர் மேற்கத்திய வங்கத்தில் தனக்கான ஒரு நிலப்பரப்பினை உண்டாக்கி சேனா சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினார். அவருடைய பேரன் விஜய சேனா வழங்கிய டியோபரா சாசனத்தில், எதிரிகள் சாமந்த சேனனை சூழ்ந்து தாக்கியபொழுது அதில் அவர் வெற்றி கொண்டார் என்று தெரிவிக்கிறது." (பக்கம்-99).
இவ்வாறு வரலாற்றறிஞர் திரு. ஆர். டி. பானர்ஜீ அவர்கள் தனது வரலாற்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார்கள்(2). இவற்றில் இருந்து நமக்கு தெரியவரும் முக்கியமான கருத்துஎன்னவென்றால், மேற்கு வங்கத்தை அரசாட்சி செய்த சேனா அரச மரபினர்கள், கர்நாடகத்தில் இருந்து சென்ற "க்ஷத்ரிய அரச மரபினர்கள்" என்பதாகும்.
சோழப் பெருவேந்தன் முதலாம் ராஜேந்திர சோழன் அவர்கள், கங்கை படையெடுப்பை முடித்துக்கொண்டு திரும்பிய தனது படைகளை, கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை நதிக்கரையின் அருகே வரவேற்றார் என்ற செய்தி பெறப்படுகிறது. எனவே கங்கை படையெடுப்பில் கர்நாடக மாநில க்ஷத்ரிய அரச மரபினர்களும் பங்குகொண்டிருப்பர் என்பது தெளிவாகிறது. அதன் காரணமாகவே மேற்கு வங்கத்தில் கர்நாடகத்தை சேர்த்த "சேனா க்ஷத்ரிய அரச மரபினர்கள்" அரசாட்சி செய்திருக்கிறார்கள்.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில் கர்நாடகத்தில் இருந்த க்ஷத்ரிய அரச மரபினர்கள் யார் என்பதற்கு விடை கிடைத்துள்ளது. கல்யாணி சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தியனின் (கி.பி.1076-1126) கன்னட மொழி கல்வெட்டு ஒன்று மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் மாவட்டம், கரத்கேள் என்னும் ஊரினில் உள்ளது. அக் கல்வெட்டு "வன்னிய வம்சத்து மன்னர்கள் அகத்திய முனிவரின் அக்னி குண்டத்தினில் இருந்து தோன்றிய வரலாற்றைப்" பற்றி சொல்கிறது(3).
அக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "மகாமண்டலேஸ்வர கர்க்கராசா (என்கிற) அர்கா" அவர்கள், கி.பி.11 ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருத கல்வெட்டில் "க்ஷத்ரிய வீரன்" என்றும் "அகத்திய முனிவரின் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றிய வன்னிய குலத்தவர்" என்றும் குறிப்பிடப்படுகிறார்(4).
மேற்குறிப்பிட்ட கல்யாணி சாளுக்கியர்களின் கல்வெட்டின் மூலம் (சமஸ்கிருதம் மற்றும் கன்னடம்), வன்னிய வம்சத்தவர்களே "க்ஷத்ரியர்கள்" என்பது தெளிவாகிறது. இது மிக மிக முக்கியமான சான்றாகும்.
மேற்கு வங்கத்தை அரசாட்சி செய்த சேனா அரச மரபினர்கள், நைஹாடி செப்புபட்டையத்தில் தங்களை "சந்திர குலத்தவர்கள்" என்று குறித்துள்ளனர்(5). சேனா அரச மரபினை தோற்றுவித்த சாமந்த சேனன் "பிரம்ம க்ஷத்ரியர்களுக்கு மலர் மகுடமாக விளங்கினான்" என்பதை சான்றுகள் குறிப்பிடுகின்றன(6).
எனவே மேற்கு வங்கத்தை அரசாட்சி செய்த சேனா அரச மரபினர்கள், "சந்திர குலத்தினர்களான பிரம்ம க்ஷத்ரியர்கள்" ஆவர். வன்னிய குலத்தை சேர்ந்தவர்களான ஹொய்சாள அரசர்கள் தங்களை "சந்திர குலத்தவர்கள்" (யது குல யாதவர்) என்று குறிப்பிட்டுள்ளனர்(7). வன்னிய குல காடவ அரசர்கள் தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றும் "சந்திர குல பிரகாசன்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்(8).
ராஜபுத்திரர்களான சாளுக்கியர்கள், அக்னி குண்டத்தில் இருந்து ஒரு கையில் வாளுடனும் மற்றொரு கையில் வேதத்துடனும் தோன்றியதாக தெரிவித்துள்ளனர்(9). மேலும் சாளுக்கியர்கள் தங்களை "சசி குல சாளுக்கியர்கள்" என்றும் கல்வெட்டினில் குறிப்பிட்டுள்ளனர்(10). அதாவது "சந்திர குலத்தினில் தோன்றிய சாளுக்கியர்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர். சசி குலம் என்றால் சந்திர குலம் என்பதாகும்.
வன்னிய குல சம்புவராய அரசர்களும் தங்களை "சாளுவர்கள்" (சாளுக்கியர்கள்) என்று கல்வெட்டினில் குறித்துள்ளனர்(11). சம்புவராயர்களின் வழி மரபினர்களே "சாளுவ மங்கு", "சாளுவ குண்டா", "மாராய நாயக்கர்", "சாயண்ண உடையார்" போன்றோர்கள் என்பதை சான்றுகள் தெரிவிக்கின்றன(12). வராக புராணம் (பன்றி) சாளுவராயர்களை "யது குல யாதவர்" (சந்திர குலத்தவர்கள்) என்று குறிப்பிடுகிறது.
எனவே மேற்குறிப்பிட்ட தெள்ளத் தெளிவான சான்றுகளின் மூலம், தெரிய வரும் கருத்து என்னவென்றால் "சந்திர குலத்தவர்களான பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பவர்கள் "வன்னிய வம்சத்தவர்கள்" என்பதாகும்.
கர்நாடகத்தில் இருந்து சென்று, மேற்கு வங்கத்தில் சேனா அரசாட்சியை ஏற்படுத்திய "சந்திர குலத்தவர்களான பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய வம்சத்தவர்கள்" என்பது தெள்ளத் தெளிவாக உண்மையாகிறது. மேலும் இவர்கள் சாளுக்கியர்களிடம் திருமண உறவை வைத்திருந்ததை சான்றுகள் தெரிவிக்கின்றன.
எனவே, மேற்கு வங்கத்தை அரசாட்சி செய்த சேனா அரச மரபினர்கள் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்திரியர்கள்" என்பது முடிவாகிறது.
Foot Notes :
(1) வன்னியர் வரலாறு, இரண்டாம் தொகுதி (பகுதி 1), தொல்லியல் அறிஞர் திரு. நடன காசிநாதன் ஐயா அவர்கள், பக்கம்-107.
(2) Palas of Bengal, R.D. Banerjee, Pages - 73 & 99.
(3) A.R.E. No.184 of 1958-59.
(4) A.R.E. No.182 of 1958-59 & Epigraphia Indica, Vol-XXXV, No.21.
(5) The early history of Bengal, Vol-I, P.L. Paul, Page No.87.
(6) The early history of Bengal, Vol-I, P.L. Paul, Page No.88.
(7) திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு சிறப்புடன் ஆட்சிசெய்த ஹொய்சாளப் பேரரசர் மூன்றாம் வீர வல்லாள தேவர் அவர்களைப் பற்றி குறிப்பிடும் 'அருணாச்சலபுராணம்' என்ற நூலானது (சருக்கம்-7), அவரை 'வன்னிய குலத்தினில் தோன்றிய மன்னன்' என்றும் 'அனல் குலத்தவன்' என்றும் குறிப்பிடுகிறது :-
"பக்தியாய் நாளும் பாதுகாத் திடுவோன்
பகர்அரும் சேர் அனல் குலத்தோன்" (பாடல் - 454)
"புகலும்மூ வகையுள் வன்னி குலத்தினில்
வருமன்னா நின் கோதுஇலாத் தருமம் கேட்டு" (பாடல் - 470)
அருணாச்சலபுராணம், ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியீடு, திருவண்ணாமலை.
"பிருதிவல்லபன் மகாராசாதிராச பரமெஸ்வர
துவாராபதி புரவராதீஸ்வர யாதவகுலாம்", (S.I.I. Vol-VI, No.35), (Bosala Vira Ramanatha Devar, Jeyangondanatha temple, Mannargudi, Tanjore).
"Hoysala race, sprung from Yadu", (Epigraphia Indica, Vol-VII, page-72).
"In the lineage of Yadu (the legendary) king sala, sasakapura acquired the named Hoysala", (Epigraphia Indica, Vol-VII, Page-73).
(8) S.I.I. Vol-XII, No.48 & நந்திக் கலம்பகம், பாடல்-39.
(9) Studies in Rajput History, Vol-I, Origin of the Chalukyas, Ranjit Singh Satyasray, Page No.73.
(10) "திருக்காளத்தி யாதவராயரில் மற்றொருவன் சசி குல சளுக்கி தனிநின்று வென்ற வீரநரசிங்க தேவன் (கி.பி.1209-63)", தமிழ்நாடு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம், பக்கம்-372.
"சளுக்கி நாராயணன் யாதவராஜன்", (S.I.I. Vol-VIII, No.509).
"Prince Simha (alias) Virarakshasa Yadavaraja, the son of Yadavaraja (alias) Tirukkalattideva. Both Tirukkalattideva and his son claimed descent from the Eastern Chalukya Family ; for, they bore the birudas Vengivallabha and Sasi Kula Chalukki" (S.I.I. Vol-III, No.84, page-208).
(11) A.R.E, Nos.754, 756, 758, 759 of 1922.
(12) Epigraphia Indica, Vol-VII, Page-76.
----- xx ----- xx ----- xx -----
By : N. Murali Naicker