கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வன்னாடு (வந்நாடு) என்பது இன்றைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. பிற்காலச் சோழர் காலத்தில் வன்னாடுடையார்கள் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயிலில் வன்னாடுடையார்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். வன்னாடுடையார்கள் சோழர்களுக்கு உறவினர்களாக விளங்கியுள்ளார்கள். கி.பி. 947 ஆம் ஆண்டைச் சார்ந்த திருவையாறு கல்வெட்டு ஒன்று முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியாக அரிஞ்சிகை என்பவளை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வரசி "வன்னாடுடையான் இலாடராயன்" என்பவரது மகளாவர். வன்னாடுடையார்கள் மிலாட்டுடையார்களுடனும் திருமண உறவை கொண்டுள்ளனர்.
பிற்காலச் சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாக திகழ்ந்த கிழ் கண்ட வன்னாடுடைய அரசர்களைப் பற்றி தெரியவருகிறது :-
"வன்னாடுடையான் தூங்கானை மறவன்"
"வன்னாடுடையார் அக்கோ புகழரையர்"
"தூங்கானை மறவன்"
"வன்னாடுடையான் இலாடராயன்"
"வன்னாடுடையான் தூங்கவன் வீரட்டார்"
"மறவன் தூங்கானான பிராந்தக வன்னாடுடையான்"
"விஜயராஜேந்திர வன்னாடுடையான்"
"வன்னாடுடையான் சிறுபாக்கமுடையான் நாயன் ராஜ ராஜ
தேவனான ராஜாதி ராஜ மகதை நாடாழ்வான்"
"ராஜ ராஜ வன்னாடுடையான்"
"வந்நாடு காணி உடைய சுத்தமல்லனான ஜெயம்கொண்ட சோழ வன்னாடுடையன்" போன்றோர் ஆவர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் ஊர்த் தெருவில் நடப்பெற்றுள்ள, மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1188) கல்வெட்டை, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் கல்வெட்டு வன்னாடுடையார்களைப் பற்றி தெரிவிக்கிறது :-
"பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலமான பிரம்மதேசத்தை இராஜ ராஜ வன்னாடுடையார் அவர்கள், "வல்லுவன் புலியனான இருபத்துநால் பேரரையன்" உள்ளிட்ட பள்ளிகளுக்கு (வன்னியர்களுக்கு) காணியாக வழங்கியுள்ளார்கள் :
"நாட்டரையனுக்கும்",
"புலியன் மாதனான மகதை நாட்டு பேரையனுக்கும்",
"புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானுக்கும்",
"புலியனான திக்கும் சாத்தன் பெரியானுக்கும்",
"சோமன் புலியனுக்கும்"
இவர்கள் (வன்னியர்கள்) வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு தவிர மற்றவர்களுக்கு விற்பதில்லை என்று கல்வெட்டில் தெரிவித்து கையெப்பம் இட்டுள்ளனர். கையெப்பம் இட்டவர்கள் :-
"மகதை நாட்டு பேரையன் புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானும்" (வன்னியர்),
"கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்",
"இராச ராச வன்னாடுடையானும்". ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----