Wednesday, 27 May 2015

சோழர்களின் குல தெய்வமான சிதம்பரம் நடராஜப் பெருமானும் சோழ வேந்தர்களும்















கோயில் என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் குறிக்கும்.  அது சைவத்தின் தலைமைக் கோவிலாகும்.  63 மூன்று நாயன்மார்களும்  தில்லை நடராஜரையும்,  தில்லை வாழ் அந்தணர்களையும் பற்றி மட்டும் தான் முதலில்  பாடியிருக்கிறார்கள்.   "தன் குல நாயகன் தாண்டவம் பயிலும் தில்லை அம்பலம்" என்று பல மெய்க்கிர்த்திக் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுக்கொண்ட விக்கிரம சோழன் (கி.பி.1118 - 1135) அக் கோயிலில் பல நற்காரியங்களைச் செய்தான். 


பரகேசரி வர்மனான முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி. 907 - 955) போரின் வெற்றிமூலம் கிடைத்த ஐந்தாயிரம் கிலோ (Five tons of Gold) பொன்னை தன் குலதெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொற்க்கூறையாக வெய்ந்தான்.  அந்த பொற்க்கூறையில் உள்ள புனிதப்படியான "பஞ்சாக்ஷரப்படியிலே" தான் பண்டைய சோழ வேந்தர்களுக்கு  வலம்புரிச்சங்கால் "திருஅபிஷேகம்" செய்யப் பெற்று ராஜசபையில் "திருமுடிச்சூடப் பெற்றது". பிச்சாவரம் சோழ அரசர்களுக்கும் அப் பண்டைய மரபுப்படியே வலம்புரிச்சங்கால் "திருஅபிஷேகம்" செய்யப் பெற்று ராஜசபையில் "திருமுடிச்சூடப் பெற்றது".  அந்த புனிதப் படியினிலே தான் மாணிக்கவாசகர் அருளிச் செய்த "திருவாசகமும்", சேக்கிழார் அருளியச் செய்த "பெரியபுராணமும்" வைக்கப்பெற்று அரங்கேற்றப்பட்டது. 


கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) "திருவிசைப்பா" என்ற திருப்பதிகம் ஒன்றை தன் குல நாயகன் மீது பாடினார். அத்  திருப்பாவில் தன்னை "கோழிவேந்தன்" எனவும் "தஞ்சையர் கோன்" எனவும் அழைத்துக்கொள்கிறார்.  அது :-


"சீரான் மல்கு தில்லைச் செம்பொன்னம் பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற்கண்ட ராதித்தன் அருந்தமிழ்மாலை வல்லார்
பேராவுலகில் பெருமையோடு பேரின்பம் எய்துவரே"        


கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயிலில், சோழ வேந்தன் கண்டராதித்த சோழன் தன் குல நாயகனை வணங்கும் சிற்பம் உள்ளது. 


கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயிலில், சோழ வேந்தன்  உத்தம சோழன் (கி.பி. 973 - 985) தன் குல நாயகனை வணங்கும் சிற்பம் உள்ளது.


முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985 - 1012) தான் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் தன்னுடைய "குல தெய்வக் கடவுளான சிதம்பரம் நடராஜருக்கு" பல சிறப்புகளைச் செய்தான்.


அவன் "ஆடல் வல்லானை" வணங்குவது போல சிற்பம் ஒன்றை தஞ்சை பெரிய கோவிலில் வைத்துள்ளான்.


அவன் "தன் குல நாயகனை வழிபடுவது" போல ஓவியம் ஒன்றை தஞ்சை பெரிய கோவிலில் வரைந்துள்ளான்.


அவன், பொன்னின் எடை அறியப் பயன்படுத்தும் எடைக்கல்லின் பெயரைக்கூட "ஆடவல்லான் எடைக்கல்" என்று பெயரிட்டுள்ளான்.


அவன், நெல் அளக்கும் மரக்காலையும் "ஆடவல்லான் மரக்கால்" என்று பெயரிட்டுள்ளான்.


இப்படி தன் குல நாயகனிடம் பேரன்புக்கொண்ட "ராஜ ராஜ சோழன்" எப்படி "அரண்மனையில் திருமுடிசூடியிருக்கமுடியும்". அவன் தனது குல தெய்வக் கோயிலான தில்லை நடராஜர் கோயிலில் தான் திருமுடிசூடியிருக்கிறான் என்பதே உண்மையாகும். 


சோழ மன்னர்கள் எந்த பண்டைய மரபுப்படி தன் குல தெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமுடிசூடினார்களோ அதே பண்டைய மரபுப்படி அங்கே பிச்சாவரம் சோழர்களும் திருமுடிசூடுகிறார்கள். 


இத் திருமுடிச்சூடும் பண்டைய மரபை தில்லை வாழ் அந்தணர்கள் சோழ மன்னர்களுக்கு இன்றும் தொடர்ந்து செய்கிறார்கள்.  சோழ மன்னர்களுக்கு அன்றி வேறு யாருக்கும் திருமுடிச்சூடமாட்டோம் என்று சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.  அது :-   


"செம்பியர்தம் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி"   


தில்லையில் திருமுடிச்சூடிய இரண்டாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1133 - 1150) சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தை தில்லை நடராஜர் கோவிலில் அரங்கேற்றினான்.  அப்பொழுது சிறுவனாக இருந்த அவன் மகனான இரண்டாம் ராஜ ராஜ சோழன் (கி.பி.1146 - 1163) தான் ஆட்சிக்கு வந்தவுடன் பெரியபுராணத்தின் மேல் இருந்த பற்றின் காரணமாக தான் எடுப்பித்த உலகப்புகழ் பெற்ற "தராசுரம் கோயிலில்" சேக்கிழாரின் ஆசியுடன் 63 நாயன்மார்களின் சிற்பத்தை "கதை சொல்லும் வடிவமாக" கோயிலில் செதுக்கியுள்ளான். அச் சிற்பங்களுக்கு பெயர்களும் கொடுத்துள்ளான்.


அச் சிற்பங்களின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், இன்று நமக்கு கிடைக்கும் பெரியபுராணம் புத்தகம் எந்த வரிசைப்படி (63 நாயன்மார்களின் பெயர்கள்) கிடக்கிறதோ அதே வரிசையிலேயே 63 நாயன்மார்களின் சிற்பங்களும் தராசுரம் கோயிலில் இடம்பெற்றிருக்கிறது.  எனவே புலவர் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் என்பது "சோழர்கள் காலத்து வரலாற்று அடிப்படை  நூலாகும்".


இந்த வரலாற்று சிறப்புமிக்க "பெரியபுராணத்தை" ஸ்ரீநிவாஸகவி என்பவர்  சமஸ்கிருதத்தில் "சிவபக்தவிலாசம்" என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் என்பதை காஞ்சிபுரம் எக்கம்பரநாதர் கோயிலில் உள்ள கி.பி.1532 ஆம் ஆண்டு சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. இன்று நமக்கு கிடைக்கும் "சிவபக்தவிலாசம்" என்பது  அப்படியே பெரியபுராணத்தின் அச்சாகும்.  எனவே பெரியபுராணம் என்பது ஒரு முழுமையான "வரலாற்று நூல்" ஆகும்.


இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க பெரியபுராணத்தில் குறிப்பிடும் வாசகம் தான் :-


"செம்பியர்தம் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி"   


இந்த தர்மத்தை தில்லை வாழ் அந்தணர்கள் இன்றும்  கடைபிடிப்பது சோழர்களின் வரலாற்றுக்கு ஒரு மணிமகுடமாகும்.  எனவே வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பிச்சாவரம் சோழ அரசர்களே பண்டைய சோழ வேந்தர்களின் மரபினர்கள் என்பது மேற்குறிப்பிட்ட அடிப்படைச் சான்றுகள் மூலம் உறுதியாகிறது.

                     
வாழ்க பிச்சாவரம் சோழ அரசர்களின் புகழ்.





----- xx ----- xx ----- xx ----- 

சோழர் காலத்து குறுநில மன்னர்களான வன்னாடு உடையார்கள்



 கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வன்னாடு (வந்நாடு) என்பது இன்றைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. பிற்காலச் சோழர் காலத்தில் வன்னாடுடையார்கள் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயிலில் வன்னாடுடையார்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். வன்னாடுடையார்கள் சோழர்களுக்கு உறவினர்களாக விளங்கியுள்ளார்கள். கி.பி. 947 ஆம் ஆண்டைச் சார்ந்த திருவையாறு கல்வெட்டு ஒன்று முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியாக அரிஞ்சிகை என்பவளை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வரசி "வன்னாடுடையான் இலாடராயன்" என்பவரது மகளாவர். வன்னாடுடையார்கள் மிலாட்டுடையார்களுடனும் திருமண உறவை கொண்டுள்ளனர்.


பிற்காலச் சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாக திகழ்ந்த கிழ் கண்ட வன்னாடுடைய அரசர்களைப் பற்றி தெரியவருகிறது :-


"வன்னாடுடையான் தூங்கானை மறவன்"

"வன்னாடுடையார் அக்கோ புகழரையர்"

"தூங்கானை மறவன்"

"வன்னாடுடையான் இலாடராயன்"

"வன்னாடுடையான் தூங்கவன் வீரட்டார்"

"மறவன் தூங்கானான பிராந்தக வன்னாடுடையான்"

"விஜயராஜேந்திர வன்னாடுடையான்"

"வன்னாடுடையான் சிறுபாக்கமுடையான் நாயன் ராஜ ராஜ
தேவனான ராஜாதி ராஜ மகதை நாடாழ்வான்"

"ராஜ ராஜ வன்னாடுடையான்"

"வந்நாடு காணி உடைய சுத்தமல்லனான ஜெயம்கொண்ட சோழ வன்னாடுடையன்" போன்றோர் ஆவர்.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் ஊர்த் தெருவில் நடப்பெற்றுள்ள, மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1188) கல்வெட்டை, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் கல்வெட்டு வன்னாடுடையார்களைப் பற்றி தெரிவிக்கிறது :-


"பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலமான பிரம்மதேசத்தை இராஜ ராஜ வன்னாடுடையார் அவர்கள், "வல்லுவன் புலியனான இருபத்துநால் பேரரையன்" உள்ளிட்ட பள்ளிகளுக்கு (வன்னியர்களுக்கு) காணியாக வழங்கியுள்ளார்கள் :

"நாட்டரையனுக்கும்",

"புலியன் மாதனான மகதை நாட்டு பேரையனுக்கும்",

"புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானுக்கும்",

"புலியனான திக்கும் சாத்தன் பெரியானுக்கும்",

"சோமன் புலியனுக்கும்"


இவர்கள் (வன்னியர்கள்) வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு தவிர மற்றவர்களுக்கு விற்பதில்லை என்று கல்வெட்டில் தெரிவித்து கையெப்பம் இட்டுள்ளனர். கையெப்பம் இட்டவர்கள் :-


"மகதை நாட்டு பேரையன் புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானும்" (வன்னியர்),

"கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்",

"இராச ராச வன்னாடுடையானும்". ஆவார்கள்.











----- xx ----- xx ----- xx -----