பண்டைய வேளிர் மரபினர்களான ஹோய்சாள அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்ட மைசூர் கோலார் பகுதியில் 400 க்கும் மேற்ப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. இவைகளில் பெரும்பாலனவை சோழர்கள் மற்றும் ஹோய்சாளர்களின் காலத்தவையாகும்.
ஹோய்சாள அரசர் "வீர இராமநாத தேவர்" (கி.பி. 1254 - 1295) அவர்களின் 37 வது ஆட்சி ஆண்டின் (கி.பி. 1291) தமிழ் கல்வெட்டு ஒன்று மைசூர் கோலார் மாவட்டத்திலுள்ள மடிவாள என்ற பகுதியில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் உள்ளது. அக் கல்வெட்டு :-
"உலகுய்ய வந்த பெருமாளுக்கு முன்னாள் வன்னியர் காலம் தொடங்கி இன்நாயனாருக்கு" (Epigraphia Carnatica, Vol - X, No.28).
என்று குறிப்பிடுகிறது. அதாவது "வன்னியர்களான ஹோய்சாளர்களின் அட்சி காலம் தொடங்கி" சென்னகேசவ பெருமாளுக்கு தானங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதேபோல அழகியாளன் என்பவரும் அப் பெருமாளுக்கு தானங்கள் கொடுத்ததாகவும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது.
எனவே ஹோய்சாளர்களின் அட்சி காலத்தை "வன்னியர் காலம்" என்று கல்வெட்டு (கி.பி. 1291) குறிப்பிடுவதால், வேளிர்களான ஹோய்சாள அரசர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய வம்சத்தவர்களே" ஆவார்கள்.
மேலும் கல்வெட்டு குறிப்பிடும் "முன்னாள் வன்னியர் காலம் தொடங்கி" என்பதை "சோழர்களின் ஆட்சி காலம் தொடங்கி" என்று பொருள் கொண்டாலும் அது "சோழர்கள் வன்னியர்களே" என்பதை பறைச்சாற்றும் முக்கிய சான்றாகும். ஆனால் இப்பதம் "ஹோய்சாள அரசர்களையே" குறிப்பதாகும். ஏனென்றால், சோழர்களின் ஆட்சிகாலத்தில் மைசூர் கோலார் பகுதிகளை ஹோய்சாள அரசர்கள் சோழர்களுக்கடங்கிய குறுநில மன்னர்களாக ஆட்சிசெய்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள்.
ஹோய்சாள அரசர் "வீர சோமேஸ்வரன்" (கி.பி. 1235 - 1263) அவர்களுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். ஒருவர் "மூன்றாம் வீர நரசிம்மன் " (கி.பி. 1254 - 1297) மற்றொருவர் "வீர இராமநாதன்" (கி.பி. 1254 - 1295). "மூன்றாம் வீர நரசிம்மன்" அவர்களின் மகனே, திருவண்ணாமலையை ஆண்ட நமது வன்னிய குல க்ஷத்ரிய அரசரான "மூன்றாம் வீர வல்லாள தேவர்" (கி.பி. 1292 - 1342) அவர்கள் ஆவார்கள்.
நமது குல கொழுந்தான ஹோய்சாள அரசர் "மூன்றாம் வீர வல்லாள தேவர்" அவர்களை, கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலப்புராணம், "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்றும் "அனல் குலத்தோன்" என்றும் குறிப்பிடுகிறது.
ஹோய்சாள அரசர் "மூன்றாம் வீர வல்லாள தேவர்" அவர்களை "வன்னியர்" என்று அருணாச்சலப் புராணம் குறிப்பிட்டதைப் போன்றே, அவரது சித்தப்பாவான "வீர இராமநாத தேவர்" அவர்களின் மைசூர் கோலார் கல்வெட்டும் "ஹோய்சாளர்களின் ஆட்சி காலத்தை வன்னியர்களின் ஆட்சி காலம்" என்றே குறிப்பிடுகிறது.
எனவே பண்டைய வேளிர்களான ஹோய்சாள அரசர்கள் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய வம்சத்தவர்களே" ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----
குறிப்பு : "மைசூர் கோலார் கல்வெட்டை பற்றி எனக்கு தெரிவித்த வரலாற்று ஆய்வாளர் திரு. மணி பாரி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்"